^Back To Top

foto1 foto2 foto3 foto4 foto5
foto5
எமது பாடசாலையின் நூறாவது ஆண்டான 2023 இன் தொனிப்பொருளுக்கமைவாக “ஒன்று சேர்ந்து எழுந்திடுவோம்” (Let’s rise together )

அதிபரின் கருத்து

யா/அராலி இந்துக் கல்லூரியானது அராலிப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் கல்வி, கலாசாரம், ஒழுக்கம், விளையாட்டு போன்ற வளர்ந்து வரும் சமுதாயத்திற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து வருவதில் பெருமையடைகின்றது. அந்தவகையிலே எமது பாடசாலை நூறாவது ஆண்டு நிறைவின் தொனிப்பொருளான “ஒன்று சேர்ந்து எழுந்திடுவோம்” (Let’s rise together) என்பதற்கமைவாக உலகம் பூராகவும் வாழும் எமது பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு எமது இணையத்தளம் பெரும் பங்காற்றும் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

அந்த வகையிலே இனிவரும் காலங்களில் தகவல்களை வெளிப்படுத்துவதற்கும் எமது தேவைகளை பதிவிடுவதற்கும் இலகுவாக இருப்பதுடன் பாடசாலையின் மீதான அனைவரினதும் நம்பிக்கையினை உருவாக்குவதற்கும் இவ் இணையத்தளம் பெரும் உதவியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இலங்கை உட்பட உலகத்தில் வாழும் எமது பாடசாலைகளின் பிள்ளைகளான பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடசாலையை இனிவரும் காலங்களில் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கு இவ் இணையத்தளம் உதவுவதற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

அவ்வகையில் இவ் இணையத்தளத்தை வடிவமைத்துத் தந்த எமது கல்லூரியின் பழைய மாணவியும் ஆசிரியையுமான திருமதி தர்மேந்திரா யர்மிளாவின் கணவரான தர்மேந்திராவிற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதிபர் : திரு.பா.பாலகுமார்

மகுடவாசகம்

“இறைவனை நினைமின் சரியானவற்றைச் செய்மின்”

பாடசாலையின் சுருக்க வரலாறு

திரு தில்லையம்பலம் சரவணமுத்து என்பவரால் திண்ணைப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை 1923 ஆம் ஆண்டில் நிர்வாக மயமாக்கப்பட்டது. 1926ஆம் ஆண்டில் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஸ்ரீ கணேச வித்தியாசாலை என்ற பெயரில் இயங்கத்தொடங்கியது. இதன் பின் அதே வளாகத்தில் 1927ஆம் ஆண்டு அராலி வடக்கு சைவ ஆங்கிலப் பாடசாலையும் தோற்றுவிக்கப்பட்டது. இப் பாடசாலை சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோற்றுவித்த 7 ஆங்கிலப் பாடசாலைகளில் ஒன்றாக அமைந்திருந்தது. இவ்விரு பாடசாலைகளும் அரசு பொறுப்பேற்கும் வரை தனித்தனியாக இயங்கி வந்தது. 1961இல் அரசு பொறுப்பேற்கும் போது இரண்டு பாடசாலையும் இணைக்கப்பட்டு அராலி இந்து ஆங்கிலப்பாடசாலை என மாற்றம் பெற்றது. 1968 ஆம் ஆண்டு அராலி இந்துக் கல்லூரி எனவும் பெயர் மாற்றம் பெற்றது. இப்பாடசாலையில் அராலி, வட்டுக்கோட்டை, சங்கரத்தை, துணைவி போன்ற கிராமங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்று வந்துள்ளனர். இப் பாடசாலையை அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்றுவரை 16 அதிபர்களின் அர்ப்பணிப்பான சேவையின் மூலம் வளர்ச்சி கண்டு இன்று வரை அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் அயராத உழைப்பினாலும் தன்னலமற்ற சேவையினாலும் வளர்ந்து நிற்கின்றது.

பாடசாலையின் பணிக்கூற்று

தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப மாணவ சமுதாயத்தை வழிகாட்டி எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான செயற்திறனுடைய அறிவாற்றலும் கொண்ட நற்பிரஜைகளை உருவாக்கல்.

நூற்றாண்டு விழா மலர் 2023

இந்துவின் நினைவுகளில்

 • 01.jpg
 • 01a.jpg
 • 04.jpg
 • 05.jpg
 • 06.jpg
 • 07.jpg
 • 08.jpg
 • 09.jpg
 • 10.jpg
 • 11.jpg
 • 12.jpg
 • 14.jpg
 • 15.jpg
 • 16.jpg
 • 18.jpg
 • 173.jpg
 • 2016-12-22_1.jpg
 • 20221020_123159.jpg
 • Academics.jpg
 • ChristM.jpg

அராலி இந்துவின் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

 

அராலி இந்துவின் இணையத்தளம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு; தர்மேந்திராவால் வடிவமைக்கப்பட்டு அதிபர் திரு.பா.பாலகுமார், பொறுப்பாசிரியர் மற்றும் விருந்தினர் முன்னிலையில் அதிகாரபூர்வமாக 07-07-2023 அன்று திறந்துவைக்கப்பட்டது..

official web : https://www.aralyhindu.com

 

பரிசளிப்பு விழா நினைவுகளில்

யா/அராலி இந்துக்கல்லூரி

பாடசாலையின் நோக்கு

அறிவாற்றலுள்ள சமுதாயத்தை உருவாக்கல்

தூரநோக்கு

தேசிய கல்விக் காெள்கைக்கு ஏற்ப மாணவ சமுதாயத்தை வழிகாட்டி எதிர்கால சவால்களுக்கு முகம் காெடுக்கக்கூடிய ஆக்க பூர்வமான செயற்திறனுடைய அறிவாற்றல் காெண்ட நற்பிரஜைகளை உருவாக்கல்.

தற்போதைய எதிர்பார்க்கை

இன்று பாடசாலையை நாடிவரும் மாணவர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பரீட்சைப் பெறுபேற்றில் உயர் வீதத்தை எதிர்பார்ப்பதுடன் எதிர்கால சவாலுக்கு முகம் கொடுக்கக் கூடிய மாணவர்களை உருவாக்க வேண்டி நிற்கின்றனர்.

ஸ்தாபகரின் நோக்கம்

ஆங்கில அரசாட்சி நிலவிய காலத்தில் இந்நாட்டிலே அதிகமான கல்லூரிகளும், வித்தியாசாலைகளும் கிறிஸ்தவ மதத்தினால்  நடாத்தப்பட்டமையாலும், அவைகளில் கல்வி கற்பவர்கள் கிறிஸ்தவ மதபோதனைக்குட்பட்டமையாலும் சிலரோ, பலரோ தமது மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு சேர நேர்ந்தது. இக்காலகட்டத்தில் சைவமும் தமிழும் தழைத்தோங்குவதற்கு இப்பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டது.

ஸ்தாபகர்  - அமரர்.உயர்.திரு.தில்லையம்பலம் சரவணமுத்து

பழைய மாணவரின் நூற்றாண்டுச் செயற்றிட்டங்கள்

 • aa.jpg
 • Aaaal.jpg
 • ad.jpg
 • ara.jpg
 • araaaa.jpg
 • aralyh.jpg
 • arrrr.jpg
 • band.jpg
 • century.jpg
 • gate.jpg
 • p1.jpg
 • p2.jpg
 • saraswathy.jpg

நூற்றாண்டின் நினைவுகளோடு

 

அராலி இந்துவின் நூற்றாண்டு நினைவுகளுடன் - 2023

Copyright @ 2024  Araly Hindu College